2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முதலுதவியினால் உயிர்களைக் காப்போம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


'முதலுதவியினால் உயிர்களைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் இருநாள் முதலுதவிப் பயிற்சியொன்று மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களுக்காக மாவட்ட சென் ஜோன் அம்பியுலன்ஸ் சங்கப் படையினரால் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் 30 பேர் கலந்து கொண்டனர்.

மாநகர ஆணையாளா எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களினால் வெளியேறும் குருதிப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி சென் ஜோன் அம்பியுலன்ஸ் மாவட்ட உதவி ஆணையாளர் எஸ். ஸ்ரான்லியினால் விளக்கமளிக்கபட்டன.

மார்க்கா நிறுவன திட்ட அதிகாரி கே. சந்திரலிங்கம், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் மாவட்ட ஆணையாளர் எஸ். சவுந்தரராஜா மற்றும் மாநகர சபையின் சமூக சுகாதார உத்தியோகத்தர் வி. பிரதீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் சங்கப் படையின் முதலாவது பாசறை 2000ஆம் ஆண்டு மாவடிவேம்பில் நடைபெற்றது. இதில் 13 முதலுதவிப் படையினர் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X