2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரணவிரு தினய

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
, எஸ்.ரவீந்திரன்

இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த காலங்களில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூரும் 'ரணவிரு தினய' நிகழ்வு நேற்று (21) வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்கப்பு, அம்பாறை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீர மற்றும் விசேட அதிரடிப்படையினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மலர் செண்டு வைத்தும், நினைவு உரை நிகழ்த்தியும் நினைவு கூரப்பட்டது.

ரணவிரு தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் களுவாஞ்சிகுடி முதியோர் இல்லதிலுள்ள முதியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், மண்டூர் ஸ்ரீ முருகன் அலயத்தில் விசேட பூஜையும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிரமதானம் ஒன்றும் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
 
இதேவேளை 'ரணவிரு தினய' நிகழ்வு, களுவாஞ்சிகுடி பொலிஸ் திலையத்திலும் நேற்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X