2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் அழைத்து சென்ற மகனை தாருங்கள்: தாய்

Kanagaraj   / 2014 மார்ச் 23 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எனது மகன் உட்பட ஐந்து மாணவர்களை மட்டக்களப்பில் அன்றிருந்த பொலிசாரே அழைத்துச் சென்றனர் ஆனால் இன்று வரை எனது மகனை காணவில்லை எனது மகனை கண்டு பிடித்து தாருங்கள் என சில்வஸ்டர் பிரசாந்தி எனும் தாய் சனிக்கிழமை (22)மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது கண்ணீர் மல்க அழுகையுடன் கூறினார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த இவர் எனது மகனின் பெயர் சில்வஸ்டர் பெர்ணான்டோ ராஜ யோசப். இவர் கடத்தப்படும் போது இவருக்கு 19 வயதாகும்.

நாங்கள் மட்டக்களப்பு மாமங்கத்தில் வசித்து வருகின்றோம். 3.5.2009 அன்று எனது மகன் மட்டக்களப்பு சுபராஜ் தியேட்டர் பகுதியில் வைத்து மட்டக்களப்பில் அன்றிருந்த பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். நான் எனது மகனை தேடி பல இடங்களுக்கும் சென்று வந்தேன் ஆனால் எனது மகன் கிடைக்கவில்லை.

எனது மகனோடு சேர்த்து றெகுபன், பேர்ணாட், கரிமுகுந்தன், பிரசாந்தன் எனும் நான்கு இளைஞர்களையும் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்களின் கதியும் இதுவரை தெரியாது. எனது மகன் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல இடங்களுக்கும் சென்றும் முறையிட்டுன். கொழும்பிலுள்ள நான்காவது மாடிக்கும் சென்றேன். ஆனால் எனது மகன் இது வரை கிடைக்கவில்லை.

எனது மகனை கண்டு பிடித்து தாருங்கள் நான் உங்களிடம் மன்றாட்டமாக கேட்கின்றேன். அவரை பொலிசார்தான் அழைத்துச் சென்றனர் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். நாங்கள் வறுமையான குடும்பம். மகனை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருக்கின்றேன்.
அவரை நான் தேடிப்போகாத இடமில்லை எனக்கு எப்படியாவது எனது மகனை கண்டு பிடித்து தாருங்கள் என உங்களிடம் மன்றாட்டமாக கேட்கின்றேன். என அவரது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X