2025 மே 15, வியாழக்கிழமை

கண்காட்சி

Super User   / 2014 மே 07 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட். முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் செயற்றிட்ட கண்காட்சி ஒன்று  திங்கட்கிழமை(05) நடைபெற்றது.

வித்தியாலய ஆசிரியர் நா.குருசந்திரராசாவின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இக்கண்காட்சியை வைபவரீதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் த.இன்பராஜ், வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

2014,2015 ஆம் ஆண்டு க.பொ.த(உ.த) பரீட்சையில் தோற்றவுள்ள கலைப்பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்காண்காட்சி வரையப்பட்ட பொருட்கூட்டம், காட்சி அலங்காரம், நிழற்படம் போன்ற சித்திரங்களும், நடுகைப் பொருட்கள், கூட்டெரு பூச்சாடி மற்றும் உணவு பண்டங்களும் இங்கு காட்சி படுத்தப்பட்டன.

இங்கு நடுகை பொருட்கள் உணவு பண்டங்கள் கைப்பணி பொருட்கள் என்பன விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .