2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏறாவூரில் தேக்குமரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிகல பகுதியை அண்மித்த அரச வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு ஏறாவூரை நோக்கி; விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போது செங்கலடி எல்லையில் வைத்து ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகளை இன்று(17) அதிகாலை கைப்பற்றிதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தேக்கு மரக்குற்றிகளை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இத் தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் சந்தேக நபர்களையும், மற்றும் கைப்பற்றப்பட்ட தேக்கு மரக்குற்றிகளையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் லேதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X