2025 மே 01, வியாழக்கிழமை

வீடு புகுந்து தாக்குதல்: ஐவர் காயம்

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸ் பிரிவு, புதிய காத்தான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை(25) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தின் பரீட் நகரிலுள்ள வீடொன்றினுள் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொல்லு, தடிகளுடன் மேற்படி வீட்டினுள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்த மூவரை தாக்கியுள்ளதுடன் அதனை தடுக்க வந்த அயலவர் ஒருவரையும் தாக்கியுள்ளனர். இதன்போது  தாக்குதலை நடத்த வந்த நபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

எம்.கபீர் (32), எம்.முன்சீர்(21), எம்.ஐ.எம்.றசீட்(44), எம்.பாசித்(18), எம்.ஐ.புகாரி(50) ஆகியோரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .