2025 மே 01, வியாழக்கிழமை

பிரதேச காரியாலய திறப்புவிழா பிற்போடப்பட்டது

Kanagaraj   / 2014 ஜூன் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணிக்கப்போடி சசிகுமார்

படுவாங்கரை பிரதேசத்தில் நிலவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக, இன்று(01) வெல்லாவெளியில் இடம்பெறவிருந்த வன ஜீவராசிகள் திணைக்கள பிரதேசக் காரியாலய திறப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது.

காட்டு யானைகளால் எற்படும் சேதத்தினையும், பாதிப்பினையும் தவிர்ப்பதற்காக வெல்லாவெளி மற்றும் வவுணதீவப் பிரதேசங்களில் இரண்டு வன ஜீவராசிகள் திணைக்கள பிரதேசக் காரியாலயங்களைத் திறப்பதாகத் அமைச்சு மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்  போது, இன்று(01) வெல்லாவெளியில் வன ஜீவராசிகள் திணைக்கள பிரதேசக் காரியாலயம் திறப்பதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி வி.ஜெகதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது; இரண்டு காரியாலயங்களுக்கும் தேவையான ஊழியர்களாக இணைத்து கொள்வதற்காக, ஆட்சேர்ப்பு செய்தவர்களுக்கான பயிற்சி நிறைவு பெறாமல் உள்ளதாக தெரிவித்தார்.

ஆளணி இல்லாததன் காரணமாக, குறித்த காரியாலயத்தை இன்று திட்டமிட்டபடி திறக்க மடியாது போனதாகவும், விரைவில் இக்காரியாலயம் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போது, காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்ட வவுணதீவப் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்;.

இதனையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வாக இன்றைய தினம் வெல்லாவெளியில் வன ஜீவராசிகள் திணைக்கள பிரதேசக் காரியாலயம் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .