2025 மே 01, வியாழக்கிழமை

சிறுவர் உழைப்பிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம்

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறுவர் உழைப்பிற்கு எதிரான தேசிய தினத்தையொட்டி  துண்டுப்பிரசுரங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை  காத்தான்குடியில் திங்கட்கிழமை(10) முன்னெடுக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இத்தினத்தையொட்டி 9ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிரதேசம் தழுவிய சிறுவர் உழைப்பிற்கு எதிராக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், காத்தான்குடி பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.நஜீம், கிராம உத்தியோகத்தர் எம்.புவாத், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .