2025 மே 01, வியாழக்கிழமை

உளவளத்துணை டிப்ளோமா பயிற்சிநெறி ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகமும் சமூக சேவைகள் அமைச்சும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள உளவளத்துணை டிப்ளோமா பயிற்சி பாடநெறி   ஞாயிற்றுக்கிழமை(15) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு விவசாய கைத்தொழில் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இதன் ஆரம்ப நிகழ்வு தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளவளத்துணை வைத்திய நிபுணர் டாக்டர் கே.கடம்பநாதன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் சிரேஷ்ட உளவளத்துணையாளருமான எஸ்.சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 42பேர் இந்த பயிற்சி நெறியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் உளவளத்துணையாளர் உமையதுல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் வகையில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க தெரிவித்தார்.

சமூகப்பணியாளர்கள், ஆசிரியர்கள், அரச, தனியார் நிறுவகங்களின் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த பயிற்சி நெறிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வருட பாடநெயறியாக நடத்தப்படவுள்ள இந்த கற்கை நெறியானது இரண்டாவது ஆண்டாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .