2025 மே 01, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 16 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள  ஓடையில் திங்கட்கிழமை (16) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள ஓடையில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பெரியகல்லாறினை சேர்ந்த கே.கணேசபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை(15) ஆறாம் கொலணியில்  இருந்து பெரியகல்லாறில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் பின்னர் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லையெனவும் உறவினர்கள் கூறினர்...

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவம் தொடர்பிலான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .