2025 மே 01, வியாழக்கிழமை

ஆற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 19 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  வெருகல் ஆற்றிலிருந்து கதிரவெளி, புச்சாக்கேணியைச் சேர்ந்த து.கோணலிங்கம் (வயது 38) என்பவர்  சடலமாக  வியாழக்கிழமை (19)  காலை மீட்கப்பட்டுள்ளதாக  வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வெருகல், கல்லரிப்பு பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த இவர்,  செவ்வாய்க்கிழமை (17) வெருகல் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், இவரை கண்டுபிடித்துத் தருமாறு வாகரைப் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (18) உறவினர்கள்   முறைப்பாடு  செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .