2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகிகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள்  ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சம்மேளனத்தின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சுபைர், செயலாளராக அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி), பொருளாளர் பீ.எம்.பாயிஸ், உபசெயலாளர்கள் ஏ.எல்.இஸட் பஹ்மி  மற்றும்  எம்.எம்.ஜௌபர், பிரதித் தலைவராக சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டனர்.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்தின்போது இத்தெரிவு மேற்கொள்ளப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமானது 58 பள்ளிவாசல்களையும் 165 இற்கும்  மேற்பட்ட சமய, சமூக, கலாசார நிறுவனங்களையும் அங்கத்துவமாகக் கொண்ட நிறுவனமாகும்.

காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி சமய, சமூக, கல்வி, கலாசார, பண்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கரிசனை கொண்டு 03 தசாப்தங்களை தாண்டியதாக இச்சம்மேளனம் செயற்பட்டு வருவதாக  உபசெயலாளர் எம்.எம்.ஜௌபர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .