2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அபிவிருத்திக்காக மட்டு. தொழில்நுட்ப கல்லூரி தெரிவு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்பக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிபர் திருநாவுக்கரசு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, கேகாலை, மாத்தளை ஆகிய தொழில்நுட்பக் கல்லூரிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தொழில்நுட்பக்  கல்லூரிகளின் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்படுவதுடன், தொழில்நுட்ப உபகரணங்கள், இயங்திரங்கள், கருவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும்,  தெரிவுசெய்யப்பட்ட 13 தொழில்நுட்ப பாடநெறிகளின் கல்வி நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்பதுடன்,  தரமான கல்வியை  மாணவர்களுக்கு வழங்கமுடியும்.

தொழில்நுட்பக் கல்வித்துறையை அபிவிருத்தி செய்தல் என்ற நோக்கில்; ஆசிய அபிவிருத்தி இத்திட்டத்தை  நடைமுறைப்படுத்துகிறது. தலா கல்லூரிக்கு 50 மில்லியன் ரூபா  செலவிடப்படவுள்ள நிலையில்,  இத்திட்டம் அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.

இளைஞர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சு, தொழில்நுட்பக் கல்வித் திணைக்களம் என்பன இத்தெரிவை மேற்கொண்டன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தொழில்நுட்பக் கல்லூரி என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிறந்த  கல்வியை வழங்கி அதிக தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

தகுதியான  மாணவர்கள் அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு என்ற முகவரிக்கு  விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல், தொழில், வணிகம் ஆகிய 3 துறைகளில் 27 தொழில்நுட்பப் பாடங்கள் என்.வீ.கியு தரத்தில்  சான்றிதழ் (தேசிய தொழில்நுட்ப தரச்சான்றிதழ்) கற்கைநெறிகளாக கற்பிக்கப்படுகின்றன. அதேநேரம், கணிய அளவையாளர் பயிற்சி டிப்ளோமாவாக கற்பிக்கப்படுகிறது.

தற்போது மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் 1,150 வரையான மாணவர்கள் கற்று வருகின்றனர். இந்தத்தொகை கடந்த வருடத்தையும்; விட 50 சதவீத அதிகரிப்பாகும் எனவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .