2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அமரர்.சுவாமி தந்திரதேவா மகராஜ்ஜின் சிரார்த்த தினம்

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்
, தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர்.சுவாமி தந்திரதேவா மகராஜ்ஜின்; ஆறாவது சிரார்த்த தினம் திங்கட்கிழமை(23) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆறாவது தின நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்தியவரும், கோணேச பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் ஆறாவது தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் எஸ்.செல்வேந்திரன், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர் எஸ்.சிவபாதசுந்தரம், பேரவையின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .