2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

புதிய பள்ளிவாயல் திறப்பு

Kogilavani   / 2014 ஜூன் 24 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தையின் கடற்கரைப் பகுதியில நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய பள்ளிவாயல் திங்கட்கிழமை(23) திறந்துவைக்கப்பட்டது.

எஸ்.எப்.ஆர்.டி எனும் நிறுவனத்தினால் குவைத் நாட்டின் தனவந்தர் ஒருவரின் உதவியுடன்; நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமித்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் மௌலானா மௌலவி எம்ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத் திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவரும் காததான்குடி காதிநீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அஸர் தொழுகை நடத்தப்பட்டு பள்ளிவாயலில் தொழுகைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .