2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காணாமல் போனோரின் உறவுகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் கடந்த கால யுத்தம் காரணமாக காணாமல் போனோரின் உறவுகளுக்கு நிதி உதவி வழங்கும் வைபவம் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, ஒன்றியத்தின் வடக்கு, கிழக்கு தலைவர் வீ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன் ஆரையம்பதி உதவி பிரதேச செயலாளர் திருமதி கே.பிரசாந்தன் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

முதல் கட்டமாக 50 காணாமல் போனோரின் உறவுகளுக்கு நிதி உதவிகள் இன்று வழங்கப்பட்டன. தொடர்ந்து 18 வருடங்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

அடுத்த கட்ட நிதி உதவிகள் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .