2025 மே 01, வியாழக்கிழமை

'வாழைச்சேனை பகுதியில் குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன'

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்


சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியினால் வாழைச்சேனைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்ன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நான்கு பிரதேச செயலாளர் பகுதிகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை(24) வாழைச்சேனை பொலிஸின் சமுகப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள் ஏற்கனவே வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று தொடர்ந்து வழங்குவதன் மூலம் எமது பகுதியில் முற்றாக குற்றச்செயல்களை ஒழிக்க முடியும்.

அதேபோன்று  இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குழைப்பதற்கு ஒரு சில தீயசக்திகள் நாடளாவிய ரீதியில் முயற்சித்து வருகின்றது. இவ்வாறானவர்களுக்கு எமது பகுதியில் இடமளிக்கக் கூடாது' என்றார்.

இக் கூட்டத்தில் மதப் பெரியார்கள், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான், கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .