2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலய திறப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 26 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஞானம் பவுண்டேசன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் காரியாலய திறப்பு நிகழ்வு, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் விசேட வைபவத்துடன் அமைப்பின் உரிமையாளர் நல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இன்று  காலை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஞானம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் திருமதி ஞானாம்பிகை நல்லிராஜா, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், லண்டன் லைகா மொபைல் நிறுவனத்தின் உப தலைவர் பிறேமநாதன் சிவசாமி, ஞானம் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் ரூமி ஜௌபர் மற்றும் ஞானம் பவுண்டேசன் அமைப்பின் நிர்வாகிகள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது 50 பாடசாலை மாணவ, மாணவியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் 50 வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், 100 வறிய மாணவர்களுக்கு வருடத்திற்கு ரூபா 12000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்பட்டதுடன், 10 வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு தொகையாக தலா ரூபா 100,000 (ஒரு லட்சம்) உம், வறிய மாணவர்களின் கல்வி வளாச்சிக்கான ஊக்குவிப்பு தொகையாக ரூபா 1,200,000 (பன்னி;ரண்டு லட்சம்) உம், மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளுக்கென ரூபா 30,000,000 (முன்னூறு லட்சம்) உம் உதவிகளாக வழங்கப்பட்டன.

பின்னர் புதிய வன்னியனார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள காரியாலயம் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிறுவனமானது கொழும்பு உலக வர்த்தக மையக்கட்டடத்தில் தலைமைக் காரியாலயத்தையும் இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 8 மாவட்டங்களிலும் தமது கிளைக்காரியாலத்தை அமைத்து வறிய மக்களுக்கு உதவி செய்வதற்காக 3000 மில்லியன் ரூபா நிதியை இத்திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 05 காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் இன்று நண்பகல் அம்பாறை கிளைக் காரியாலயமும் மாலை மன்னார் கிளைக்காரியாலயமும் திறந்த வைக்கப்படவுள்ளதாக அமைப்பின் தலைவர் நல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .