2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கூரையினூடாக வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள்

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய வீதி மற்றும் கல்லடி சரவணா வீதிகளிலுள்ள இரு வீடுகளில் நுழைந்து திருடர்கள்,  நகை மற்றும் பணம் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய வீதியிலுள்ள எழில்வேந்தன் என்பவரின் வீட்டுக் கூரையினூடாக உள்நுழைந்த திருடர்கள் இரண்டரைப் பவுண் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை  மற்றொரு நபரின் வீட்டிலிருந்து எவ்விதாமான பொருட்களும் காணாமல் போகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .