2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாழைச்சேனை போக்குவரத்து சாலைக்கு சொகுசு பஸ் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


இலங்கை போக்குவரத்துச் சபையினால் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது சொகுசு பஸ் வாழைச்சேனை போக்குவரத்துச் சாலைக்கு வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் இன்று (28) பிற்பகல் நடைபெற்றது.

வாழைச்சேனை போக்குவரத்து சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சொகுசு பஸ்ஸினை சாலை முகாமையாளரிடம் கையளித்தார்.

மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க போக்குரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் இந்த பஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்; இரவு 09.00 மணிக்கு காத்தான்குடியில் இருந்து புறப்பட்டு பாசிக்குடா வழியாக கொழும்புக்குச் சென்று மறுநாள் இரவு கொழும்பில் இருந்து பாசிக்குடா வழியாக காத்தான்குடியைச் சென்றடையும் என்றும் இச் சேவை எதிர் வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான பொன் ரவீந்திரன், திருமதி ருத்ரமலர் ஞானபாஸ்கரன், வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்ன, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .