2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹெரோயினுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 28 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்  ஜுலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு பதில் நீதிவான் ஆர். கண்ணன் சனிக்கிழமை  (28) உத்தரவிட்டுள்ளார்.

1500 மில்லிகிராம் (20 பக்கற்றுகள்) ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த நபரைக் கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி;; எம்.ஏ.சி. தாஹிர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .