2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு ஸாஹிறா வித்தியாலயத்தில் 36 இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்; நிகழ்வு சனிக்கிழமை 28 நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி எஸ். ரவிதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

240 மாணவ மாணவியர் கல்வி கற்கின்ற இப்பாடசாலையில் நீண்ட காலமாக போதியளவு வகுப்பறைக் கட்டிடம் இல்லாதிருந்த குறை புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதும் நீங்கி விடுமென பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ. பிரசாந்தன், வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், உதவி கல்விப் பணிப்பாளர் எம். குருகுலசிங்கம், பொறியியலாளர் ஆர். கிரிஷ்ணதாசன், கோட்டக்கல்வி அதிகாரி ஏ. சுகுமாரன் ஆகியோருட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .