2025 மே 01, வியாழக்கிழமை

சிவில் பாகாப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


பொலிஸ் திணைக்களத்தால் நடத்தப்படும் சிவில் பாதுகாப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெற்றது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.எஸ். துசித்தகுமார பண்டார தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வி;ல், ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர் நகரம் மற்றும் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 48 கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எஸ்கோ எனப்படும் சர்வதேச உதவி நிறுவனம் இந்நிகழ்ச்சியை இணைப்பாக்கம் செய்திருந்ததோடு முழுமையான நிதி அனுசரணையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .