2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இடைநிறுத்தப்பட்ட பொலிஸார் இடமாற்றத்துடன் மீண்டும் கடமையில்

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடமையின் போது சீருடை அணியாமல் நடமாடியமையால் பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரில் நால்வர் இடமாற்றத்துடன் மீண்டும் கடமையேற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மேற்படி நான்கு பொலிஸாரும் நேற்றைய தினம் (28) திருகோணமலைக்கு இடமாற்றத்துடன் கடமையேற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதியொருவரைக் பிடிப்பதற்காக சிவிலுடையில் நடமாடிய பொலிஸார் ஐவர் கடந்த 07ஆம் திகதி முதல் பணயிலருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் உட்பட மேலும் நான்கு பொலிஸாருடன் சேர்த்து ஐவரடங்கிய பொலிஸ் சோதனைக் குழுவொன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதியொருவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரையுமே அவர்களுடைய கடமை நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் அதிகாலை 2 மணியளவில் இப் பொலிஸ் குழுவைச் சோதனையிட்டபோது அவர்களில் எவரும் சீருடை அணியவில்லை என்ற விடயம் தெரியவந்துள்ளது.

இது விடயமாக நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்கருக்கூடாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, கடந்த 07ஆம் திகதி முதல் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த  நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் தமது கடமையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, உப பொலிஸ் பரிசோதகரான மற்றையவரின் தகுதிகூர் பதவவிநிலைக் காலம் பூர்த்தியடையாததால் அவருக்கு கடமைப்பு பொறுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்புக் கூறுகின்றது.

அவருக்கு சேவைக்காலம் கணக்கிலெடுக்கப்படாது புதிய நியமனம் வழங்கப்படலாம் என்றும் பொலிஸ் தரப்புக் கூறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .