2025 மே 01, வியாழக்கிழமை

கைம்பெண்களுக்கு புடவைகள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஜூன் 29 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.எம்.அனாம்


சமூக சேவைகள் அமைச்சினால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான தியாவட்டுவான் கிராமத்தில் உள்ள கைம்பெண்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசேகர சூரியாராச்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.நளீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஓட்டமாவடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.ஐ.சரீப், தியாவட்டுவான் மாதர் சங்கத் தலைவி யூ.எல்.ஆயிஷா, செம்மண்னோடை மாதர் சங்கத் தலைவி லத்தீபா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டு சாரிகளை வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வின் போது தியாவட்டுவான் கிராமத்தில் உள்ள இருபத்தைந்து கைம்பெண்களுக்கு சாரிகள் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .