2025 மே 02, வெள்ளிக்கிழமை

பசுப்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் காத்தான்குடி கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான பசுப்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் நேற்று(4) மாலை காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி கால்நடை வைத்திய அலுவலக வளாகத்தில் காத்தான்குடி கால் நடை வைத்தியர் டாக்டர் திருமதி எஸ்.எம்.ஐ.எல்.சுகலசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப வைபவத்தில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டாக்டர் டி.கே.தவராஜன் உட்பட சமய பிரமுகர்கள், மற்றும் பொலிஸ் அதிகாரிகள், உட்பட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் காத்தான்குடி கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள், கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர்களுக்கு தூய பசுப்பால் வழங்கப்பட்டு பசுப்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு காத்தான்குடி பிரதேசத்தில் புல் வளர்க்கும் இரண்டு புல் வளர்ப்பாளர்களுக்கு ஒருவருக்கு தலா 15000 ரூபா பெறுமதியான தண்ணீர் இயந்திரங்கள் மற்றும் வேலி அடைப்பதற்கான சுருள் கம்பிகள் என்பனவும் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X