2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குருக்கள் மடம் விவகாரம்: மூவர் முறைபாடு

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

1990 ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்திக் கொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ள புதை குழியை தோண்டுமாறு காத்தான்குடி நகர சபை தலைவர் உட்பட மூன்று பேர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள், நேற்று முன் தினம் முறைப்பாடு செய்துள்ளனர். காத்தான்குடி நகர சபை தலைவர் சாகுல் ஹமீட் முகம்மட் அஸ்பர், மற்றும் முகம்மட் அலாவுதீன் முகம்மட் பைசல், கச்சிமுகம்மட் முகம்மட் நசார் ஆகிய முவரும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

தமது உறவினர்கள் 12.7.1990 ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி வருகை தரும் போது குருக்கள் மடம் பகுதியில் வைத்து கடத்திக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை தோண்டி இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

1990ம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்திக் கொலை செய்யப்பட்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ள புதை குழியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி களுவாஞசிகுடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X