2025 மே 02, வெள்ளிக்கிழமை

மத்தியஸ்த சபை அங்கத்தவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மத்தியஸ்த சபை அங்கத்தவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (05) மண்முனை தென் எருவில் பற்று பிரதே செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம்; தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தலிருந்து தெரிவு செய்யப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்ட 31 பேருக்கு மத்தியஸ்த்த சபை அங்கத்துவத்திற்கான நியமனங்கள் வழங்கப்பட்டதாக  பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் குற்ற பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிசாந்த லொக்குககே, போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மத்தியஸ்த்த சபை தவிசாளர் திருமத்தி சுஜா வரதராஜன், உப தலைவர் எஸ்.மகேஸ்வரன். பட்டிருப்புக் கல்வி வலய முன்பள்ளி பாடசாலைகள் உதவிக் கல்விப் பணிப்பாளர் ந.புவனசுந்தரம், மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், மத்தியஸ்த சபை அங்கத்தவர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X