2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு காவியா நிறுவனம் உதவுகின்றது'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களை மேம்படுத்துவதற்கு காவியா நிறுவனம் உதவி வருகின்றது என மட்டக்களப்பு காவியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காவியா நிறுவனத்தின் அலுலகத்தில் சனிக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி வருகின்றோம்.

அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு நுண்கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன்,  பல்வேறு தொழில் பயிற்சிகள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள், திறன் விருத்திப் பயிற்சிகள் என்பவற்றையும் காவியா நிறுவனம் வழங்கியுள்ளது.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 300 பெண் தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர் சம்மேளனம் ஒன்றையும் உருவாக்கியுள்ளோம்.

அந்தப்  பெண் தொழில் முயற்சியாளர் சம்மேளனத்தினால் மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக் கண்காட்சியொன்று இரண்டாவது வருடமாகவும் எதிர்வரும் செப்ன்;டம்பர் மாதம் 12ஆம் 13ஆம் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள உற்பத்திக் கண்காட்சியில் 120 பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பவுள்ளதுடன், விற்பனையும் இடம்பெறவுள்ளது. இதற்கு காவியா நிறுவனம் மற்றும் சுவிடிஸ் கூட்டுறவு நிறுவனம் என்பவை அனுசரணை வழங்கவுள்ளன.   மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியா நிறுவனம் 3,000 பெண்களை அங்கத்தவர்களாக கொண்டு செயற்பட்டு வருகின்றது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X