2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாகனங்களை அரிவாளால் வெட்டியதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் சனிக்கிழமை (05) மாலை    மதுபோதையில் காணப்பட்ட ஒருவர், வீதியால் சென்ற வாகனங்களை அரிவாளால் வெட்டியமை தொடர்பில் அவ்வாகனங்களின் உரிமையாளர்கள் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபரால் 02 கார்கள், ஒரு முச்சக்கரவண்டி, ஒரு சைக்கிள் என்பன அரிவாள் வெட்டுக்கு உள்ளாகின.

மதுபோதையில் சடுதியாக வீதிக்கு வந்த இவர்,  தனது கையில் வைத்திருந்த அரிவாளால் வீதியில் பயணித்த வாகனங்களை வெட்டி விட்டு  தலைமறைவாகியதாகவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X