2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடமாக ஈஸ்ட் லகூண் திகழ்கின்றது'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


'மட்டக்களப்பில் உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடங்களில்  ஒன்றாக மட்டக்களப்பின் முத்து என அழைக்கப்படும்  ஈஸ்ட் லகூண் ஹோட்டல் திகழ்கின்றது. தமிழ்,  முஸ்லிம்களின் உறவுகளை இணைக்கும் உறவுப் பாலமாகவும் இது உள்ளது'.

இவ்வாறு கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் எம்.கணேசராஜா தெரிவித்தார்.

ஈஸ்ட் லகூண் ஹோட்டலின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இதை அமைப்பதற்கு உதவி புரிந்த அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு  உரிமையாளர் எம்.செல்வராஜாவால் நன்றி தெரிவிக்கும்  நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இதுவரை காலமும் மட்டக்களப்பின் மரபுரிமை இடங்களான ஒல்லாந்தர் கோட்டை, கல்லடிப்பாலம், மற்றும் மட்டக்களப்பு வாவி என்பன அமைந்திருந்தன. தற்போது ஈஸ்ட் லகூண் ஹோட்டலும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மையங்களுள் ஒன்றாக மட்டக்களப்பில் ரூபா 35 மில்லியன் செலவில் இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு முன்மாதிரியாக செல்வராஜா திகழ்கின்றார். அவரின் அயராத முயற்சி அனைவராலும் பாராட்டப்படவேண்டியது.

இந்த ஹோட்டலை  கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்து உரையாற்றுகையில், உல்லாசப் பிரயாணத்துறைக்கு மட்டக்களப்பில் இது தங்கச் சுரங்கம் எனக் குறிப்பிட்டிருந்தார்'

இந்நிகழ்வில் செல்வராஜாவால் தனது முன்னேற்றத்திற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்த மட்டக்களப்பு  மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் எஸ்.மௌனகுருசாமி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X