2025 மே 02, வெள்ளிக்கிழமை

குருக்கள்மடம் விவகாரம்: செவ்வாய் வரை முறையிடலாம்

Kanagaraj   / 2014 ஜூலை 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (8) வரை முறையிடலாம் என்று களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சி.ஐ.இந்திக லொகுகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பகுதியில் வைத்து 1990 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களை தோண்டுமாறு கோரி அவர்களின் உறவினர்கள், களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் இன்று (6)ஞாயிற்றுக்கிழமை முதல் முறைப்பாடுகளை செய்துவருகின்றனர்.

இந்த முறைப்பாடு பதிவு செய்யும் நடவடிக்கை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றுவருகின்றது.

காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு செல்வது சிரமம் எனவும் அதை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைய களுவாஞ்சிகுடி பொலிசார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து இவர்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சி.ஐ.இந்திக லொகுகே தலைமையில் இந்த முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கை இடம் பெற்றுவருகின்றது.
 
கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் 12.7.1990 அன்று சென்ற தமது உறவினர்களை குருக்கள் மடத்தில் வைத்து கடத்திக் கொலை செய்து அப்பரதேசத்தில் புதைத்துள்ளதாகவும் அப்புதைகுழியை தோண்டி ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்து வருகின்றனர்.







You May Also Like

  Comments - 0

  • M.A.A.Rasheed Sunday, 06 July 2014 04:27 PM

    எல்லாப் பக்கமும் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கிறது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X