2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் இந்தியா விஜயம்

Kogilavani   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்தியாவின் டில்லி நகரில் நடைபெறும் அனர்த்த முகாமைத்துவ கொள்கை வகுப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப் பணிப்பாளர் சன்முகநாதன் இன்பராஜன் ஞாயிற்றுக்கிழமை(6) காலை இந்தியாவுக்கு பயணமானார்.

இந்த மாநாடு திங்கட்கிழமை(7) ஆரம்பமாகி சனிக்கிழமை(12) வரை நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப் பணி;ப்பாளர் சன்முகநாதன் இன்பராஜன் தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான அனர்த்த முகாமைத்துவ கொள்கை வகுப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப் பணிப்பாளர் சன்முகநாதன் இன்பராஜன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X