2025 மே 02, வெள்ளிக்கிழமை

'முயற்சியாளர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 06 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முயற்சியாளர்களுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்டத்தின்  முன்னாள் அரசாங்க அதிபர் எம்.மொனகுருசாமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஒரு வருட பூர்த்தியையொட்டி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'முயற்சியாளர்களுக்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது. அவர்களை முன்னேற்றும் படிக்கல்லாக நாம் இருக்க வேண்டும்.
இந்த விடுதியின் ஸ்தாபகர் எம்.செல்வராசாவின் முயற்சி பாராட்டுக்குரியது.

முஸ்லிம்கள் இல்லையென்றிருந்தால் இந்த நாடு வளர்ந்திருக்காது. முஸ்லிம் வியாரிகள்தான் இந்த நாட்டை வளர்ச்சியடைச் செய்தார்கள்.
இந்த விடுதியானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், இதன் உரிமையாளர் எம்.செல்வராசாவின் முயற்சி பாராட்டுக்குரியதாகும்' என்றார். 

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹிந்து கருணாரட்ன, மட்டு. மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த ஹோட்டலின் உரிமையாளரினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் மொனகுருசாமிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், ஈஸ்ட் லகூன் ஹோட்டலின் உரிமையாளர் எம்.செல்வராசாவின் முயற்சியை பலரும் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X