2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கிப் பலி

Kanagaraj   / 2014 ஜூலை 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்
, க.ருத்திரன், ஜவ்பர்கான்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் மாணவர்கள் இருவர் இன்று காலை மூழ்கி; பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
முறக்கொட்டான்சேனை கஜமோகன் வித்தியாலயத் சேர்ந்த  மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுற்றுலாவின் நிமித்தம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஒருவருடன் 14 மாணவர்கள் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கிருந்து அவர்கள் படகுமூலமாக முகத்துவார பகுதிக்குச் சென்ற போது அங்கு மட்டி பிடிக்கச் சென்ற இரு மாணவர்களே கடலில் மூழ்கியதாகி மரணமாகியுள்ளனர்.

அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக  கடலில் இறங்கிய ஐவரும் கரையிலிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த மாணவர்களான பிரவின் மற்றும் செல்வராணி ஆகிய இருவரினதும் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X