2025 மே 02, வெள்ளிக்கிழமை

கொக்கடிச்சோலையில் மண்டையோடு கண்டெடுப்பு

Kogilavani   / 2014 ஜூலை 07 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, கொக்கடிச்சோலை பிரதேசத்திலுள்ள  வயல் வெளியொன்றிலிருந்து மனித மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கடிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கடிச்சோலை பண்டாரியாவெளி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள வயல் வெளியிலிருந்தே இந்த மண்டையோடு ஞாயிற்றுக்கிழமை(6) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது, சுமார் 15 வயதிற்குட்பட்ட  ஒருவரின்  மண்டையோடாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

மண்டையோடு கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் கொக்கடிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X