2025 மே 02, வெள்ளிக்கிழமை

சாரதியின்மையால் அம்பியூலன்ஸ் வண்டி கராஜில்

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலுள்ள அம்பியூலன்ஸ் வண்டியொன்று சாரதியில்லாமல் வெறுமனே கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் யூ.எல்.முஹைதீன்பாபா புதன்கிழமை(9)தெரிவித்தார்.

ஏற்கனவே, இவ்விடயம் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனையடுத்து கடந்த ஜூன் முதலாம் திகதி சுகுமாரன் குருசரன் என்ற சாரதி ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டிக்குரிய சாரதியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அன்றைய தினம் மாலையாவதற்கு இடையில் அந்த சாரதி மீண்டும் திருப்பியழைக்கப்பட்டுவிட்டார்.

தற்சமயம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலுள்ள அம்பியூலன்ஸ் வண்டியொன்று சாரதியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து தாங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம்” என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X