2025 மே 02, வெள்ளிக்கிழமை

அவசர தேவைகளை பூர்த்தி செய்யுமாறு வேண்டுகோள்

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாக அதன் அபிவிருத்திக் குழுத் தலைவர் யூ.எல்.முஹைதீன் பாபா புதன்கிழமை(9) தெரிவித்தார்.

இதனால், நோயாளர்களும் கடமையாற்றும் ஊழியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பாய்கள் 100, படுக்கை விரிப்புக்கள் 100, பெட்சைட் லொக்கர் 30, திருகு பல்புகள் 15, பல்புகள் 15 போன்றவை தேவைப்பவதாகவும் இவற்றை பரோபகாரிகளும் பொதுத் தொண்டுக்காகப் பணியாற்றும்  நிறுவனங்களும் பூர்த்தி செய்ய ஆவன செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது விடயமானதொரு வேண்டுகோளை தாம் கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களிடமும் ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானாவிடமும் விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மொத்தம் 35 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான ஆறு மின்விசிறிகளை ஏறாவூர் நகரசபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா ஏறாவூர் நகரசபையினூடாக அன்பளிப்புச் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X