2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அரச கரும மொழிக் கொள்கை, சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை, இன விவகார திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரச கரும மொழிக் கொள்கை, சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை மற்றும் இன விவகாரங்கள் குறித்த 200 கருத்திட்டங்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரச மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் அபிவிருத்திக்கான மேலதிகச் செயலாளர் எச்.ஹேவகேயினால் மொழிச் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

பிரதேச ரீதியாக உள்ள மொழிச் சங்கங்களால் முன்வைக்கப்படும் கருத்திட்டங்கள் தொடர்பாக தலா 50,000 ஆயிரம் ரூபாவை வழங்க அமைச்சு தயாராக இருப்பதாக மேற்படி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச கரும மொழிக் கொள்கை, சமூக ஒருமைப்பாட்டு மேம்பாடுகள் தொடர்பாக திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரச கரும மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை மற்றும் இன விவகாரங்கள் குறித்த 200 கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக அமைச்சின் மூலம் ‘அபூர்வ நதி’ எனும் காலாண்டு சஞ்சிகை வெளியிடப்படவுள்ளது.

இதில் மொழிச்சங்க அங்கத்தவர்களின் ஆக்கபூர்வப் படைப்புக்களும் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X