2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரத்ததான முகாம்

Super User   / 2014 ஜூலை 10 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடுசெய்த இரத்ததான முகாம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (09) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 40 இரத்த நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தம் பெறப்பட்டதாகவும், மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு மாதாந்தம் 600 பொயின்ட் இரத்தம் தேவைப்படுவதாகவும் இவற்றுள் 200 தொடக்கம் 300 பொயின்ட் இரத்தம் மாத்திரம் நன்கொடையாகப் பெறப்படுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் கே.விவேக் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X