2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிக் கற்கைகள் நிலையத்தின் பட்டமளிப்பு விழா

Kanagaraj   / 2014 ஜூலை 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டங்களுக்கான சான்றிதழ் மற்றும் பட்டம் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை(13) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிக் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் அன்ரனி அன்ரூவ் அறிவித்துள்ளார்.

காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரையும் நல்லையா மண்டபத்தில் இரண்டு அமர்வுகளாக இந்த வைபவம் இடம்பெறவிருக்கின்றது.

காலை ஒன்பது மணி தொடக்கம் காலை 11 மணிவரை இடம்பெறவிருக்கின்ற முதலாவது அமர்வில் 225 கலைமாணிப் பட்டங்களுக்;கான சான்றிதழ்கள் வழங்கப்படவிருக்கின்றன.

காலை 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை இடம்பெறவிருக்கின்ற இரண்டாவது அமர்வில் 203 கலைமானிப் பட்டங்களும் 5 நிர்வாகமானிப் பட்டங்களும், ஒரு விஞ்ஞானமானிப் பட்டமும், திருகோணமலை வளாகத்திலிருந்து ஒரு விஞ்ஞான முகாமைத்துவமானிப் பட்டமும் வழங்கப்படவுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X