2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவுக்கு பணியாளர்களை நியமிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 11 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவுக்கு  பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் அடிகளார் போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.

இது  தொடர்பான பணிப்பாளர் சபைக் கூட்டம் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவில் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பணிப்பாளர் சபை உறுப்பினர்களான வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா ஸ்தாபகர்களில் ஒருவரான ஏ.எச்.ஏ.ஹுஸைன், அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம், வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா கலைஞர் ரீ.நகுலேஸ்வரன், கணக்காளர் ஆர்.எப்.கமலநாததீபன,; ஓய்வுபெற்ற ஆசிரியர்களான  ராஜேஸ் கந்தையா, கே.அரியரெட்ணம் ஆகியோர இதில்; கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து 2015 ஜனவரி வரையான 06 மாதங்களுக்கு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவில் பணியாற்றக்கூடியதாக நியமனம் வழங்கப்படுவதற்கு பணிப்பாளர் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தற்போது கடமையாற்றும் ஆளணியினர் உட்பட தகுதியானவர்கள் புதிய பணியாளர் தொகுதிக்கு உள்வாங்கப்படவுள்ளனர்;.

நேர்முகப் பரீட்சைக்கு இதுவரையில் 23 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதலாவது நேர்முகப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (14) வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவில் நடைபெறும் எனவும் பணிப்பாளர் அடிகளார் போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X