2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏறாவூரில் இரு சடலங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 11 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.ருத்திரன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வெவ்வேறு ஊர்களில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை ஆணொருவரதும் பெண்ணொருவரதும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 4, வேலாயுதம் வீதியைச் சேர்ந்த செல்வம் விக்னேஸ்வரன் (வயது 31) எனும் இளைஞனின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏரிக்கரை வீதி, கோரகல்லிமடு எனுமிடத்திலிருந்து சோமசுந்தரம் கமலாவதி எனும் 42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
 
ஏறாவூர் பொலிஸார் இவ்விரு சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X