2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆலய திருவிழாவை முன்னிட்டு சிரமதானம்

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானமும் கண்ணகையம்மன் வீதியும் செப்பனிடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றன.

பிரசித்தி பெற்ற அமிர்தகழி மாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாவதை முன்னிட்டு அதன் வளாகம், தீர்த்தக்குளம், மலசல கூடங்கள், பார்வீதி மற்றும் ஆலய வீதி என்பன துப்பரவு செய்யப்பட்டதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களின் நலன் கருதி மிகவும் மோசமான நிiயில்  ஆலயத்திற்கு அருகிலுள்ள 200 மீற்றர் நீளமான கண்ணகையம்மன் வீதி மாநகரசபையின் வரிப்பணத்திலிருந்து ரூபாய் ஒரு மில்லியன் செலவில் திருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பணிகளில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் உட்பட தொழிலாளர்கள் 250 பேர் இன்று முழுநாளும் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X