2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மாகாண பாடசாலை அதிபர்களுக்கு சந்தர்ப்பம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 11 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாகாணப் பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் அதிபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர்  அநுர திஸாநாயக்க, மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2014ஆம் ஆண்டுக்காக தேசியப் பாடசாலைகளுக்கான அதிபர் தரம் கொண்டோரை இடமாற்றம் செய்வது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளது.

அதற்கமைவாக மாகாணப் பாடசாலைகளிலிருந்து தேசியப் பாடசாலைகளுக்கு இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் அதிபர் சேவை உத்தியோகஸ்தர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

எனவே மாகாணப் பாடசாலைகளில் தற்சமயம் அதிபர் சேவையில் கடமையாற்றும் விருப்பமுள்ள அதிபர்கள் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஜுலை 31ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் “உதவிச் செயலாளர் (அதிபர்), அதிபர் கிளை, கல்வி அமைச்சு இசுறுபாய- பத்தரமுல்ல” என்ற முகவரிக்கு மாகாணக் கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் 18.07.2014ஆம் திகதிக்கு முன்னர் தமது பணிமனைகளுக்கு அனுப்பி வைக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X