2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் ஏரிக்குள் மயங்கி விழுந்து மரணம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 11 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறை மதுரங்குழி ஆற்றில் கட்டுவலை போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமான சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இலங்கைத்துறையைச் சேர்ந்த வர்ணகுலசிங்கம் செல்வகுமார் (வயது 48) எனும் மீனவர் நேற்று வியாழக்கிழமை காலை அவரது மனைவி மற்றும் சக மீனவர்களுடன் சேர்ந்து இலங்கைத்துறை மதுரங்குழி ஆற்றில் கட்டுவலை போட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது அவர் ஏரிக்குள் நின்றவாறே மயங்கி விழுவதை கூடவே நின்று பிடியில் ஈடுபட்ட அவரது மனைவியும் சக மீனவர்களும் கண்டு அவரைக் கரை சேர்த்துள்ளனர்.

கரையில் இருந்து 500 மீற்றர் தூரத்திலுள்ள அவரது வீட்டுக்கு அவரைத் தூக்கிக் கொண்டு செல்லும்போதே அவர் உயிரிழந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X