2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பலநோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சித்தாண்டி 3 கிராம சேவையாளர் பிரிவில்; பலநோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் வியாழக்கிழமை (10) நாட்டப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இப்பலநோக்கு கட்டிடத்திற்கு முதற்கட்டமாக ரூபா பத்து இலட்டசம் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாரியம்மன் ஆலய பிரதம பூசகர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளரும் சித்தாண்டி மாவடிவேம்பு காளிகோயில் தலைவருமான ஆ.தேவராஜ், திருநாவுக்கரசு, மகளீர் சங்க பிரதிநிதிகள் கிராம வாசிகள் உள்ளீட்டு பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X