2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மதுக்கடை விவகாரம்: இறுதித் தீர்மானம் எடுக்கும்வரை திறக்கவேண்டாம் என கடிதம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு திருமலை வீதி கும்புறுமூலையில் மதுபானசாலைக்கட்டம் ஒன்றை அமைப்பதற்கான கட்டட அனுமதி உடனடியாக செயற்படும் வண்ணம் இடை நிறுத்தம் செய்யப்படுவதாகவும் பூர்வாங்க விசாரணையின் பின்பு அனுமதி தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் வாழைச்சேனை பிரதேச சபை செயலாளரினால் கட்டட உரிமையாளருக்கு திங்கட்கிழமை (07) கடிதம் மூலம் அறிவித்தல்  விடுக்கப்பட்டுள்ளது.  

கிண்ணையடி பிரதேசத்தின் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயப் பெரியோர்கள் இது விடயம் தொடர்பாக  மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு தெரிவித்தமையினையடுத்து  இந்;  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிண்ணையடி பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளைத் தலைவர் ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

அத்துடன் இந் நடவடிக்கையினை விரைவாக செயற்படுத்தி தந்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் மற்றும் அவரது செயலாளர் பொன். இரவீந்திரன் ஆகியோர்களுக்கு பொது மக்கள் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

மேற்படி மதுபானசாலையானது பாசிக்குடா வீதி கல்குடாவில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வியாபாரத்தில் மந்த நிலை எற்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி இடத்தை தெரிவுசெய்து குறித்த மதுபானசாலையிலனை அவ்விடத்தில் கட்டுவதற்கான அனுமதியினை பெற்று நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததாகவும் கட்டட உரிமையாளர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X