2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விரைவில் பதவியுயர்வு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தில் நிலவும் வருமான அத்தியட்சகர் பதவி வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

மொத்தமாக காணப்படும் 62 வருமான அத்தியட்சகர் பதவி வெற்றிடங்களில்; 32 வெற்றிடங்களுக்கு, தற்போது சேவையிலுள்ள வருமான மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதுடன் மீதி 30 வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் வருமான மேற்பார்வையாளர்கள் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக 30 வருமான அத்தியட்சகர்களை நியமிப்பதற்கேற்ற வகையில் விரைவில் விண்ணப்பம் கோரப்படவுள்ளது. எழுத்துப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை என்பனவற்றின் அடிப்படையில் புதியவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளனதாகவும் இவர்  தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றும் சாரதிகள், சிற்றூழியர்கள் சுமார் 600 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதுடன் இதுவும் பரீட்சை, நேர்முகப்பரீட்சை என்பவற்றினூடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பமும் விரைவில் கோரப்படவுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவற்றில் கடமையாற்றும் சாரதிகள், சிறு பணியாளர்கள் நீண்டகாலம் பதவி உயர்வின்றி பணியாற்றி வருவதாக முதலமைச்சரின் கவனத்திற் கொண்டு வரப்பட்டதையடுத்தே இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக செயலாளர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X