2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று

Suganthini Ratnam   / 2014 ஜூலை 13 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 04  தினங்களாக கச்சான் காற்று எனப்படும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காற்று வீசுவதாக அம்மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

இந்தக் காற்று பகல் வேளைகளில் காலை 09 மணியிலிருந்து மாலை 05 மணிவரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு 20 முதல் 25 கிலோமீற்றர் வேகத்தில் வீசுகின்றது. கடல் பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் காற்றினால் சைக்கிள்கள்  மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணிப்பவர்களும் பாதசாரிகளும்  சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்த தென்மேற்;கு பருவப்பெயர்ச்சிக்; காற்று கிழக்கு,  தென்கிழக்கு மற்றும் கடலைச் சூழவுள்ள பிரதேசங்களில் மே மாதம் முதல்  செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்  வீசுவது வழமையெனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X